வாசகர்களுக்கு வணக்கம்,
இந்த பதிவில் சித்தர் பெருமான் பெண்ணாசை யை ஒழிக்க அல்லது வெறுக்க கூறிய வழி முறைகள் பற்றி பார்க்கலாம், மனித வாழ்க்கைையில் மனிதனை எளிதில் வசப்படுத்த கூடிய ஒன்று காமம்் என்றால் அது மிகை ஆகாது. எவன் ஒருவன்் இந்த காம பந்தத்தை அறுக்கின்றானோ ஞான இறைநிலையானது அவனுக்கு மிக எளிதானதாக ஆகிவிடுகிறதுு. காமம் என்பது ஒரு ஆணுக்கு பெண்ணின் மீது அல்லது பெண்ணிற்கு ஆணின்் மீதோ உள்ள உடல்் சார்ந்்த இச்சையை மட்டுமே குறிக்கிறது, இவ்வாறான இச்சையைை மாற்றியமைக்க சித்ததர் பெருமாான் கூறிய வழி முறைகளை காணலாம்.
பிழைகள் ஏதும் இருப்பின் உள்ளீடுகள் வழங்கி பிழைகளைை திருத்த வாசகர்் பெருமக்கள் உதவியும், வலைதளத்திற்கு தங்களதுஆதரவையுும் வேண்டுகிறேன்,
நன்றி.
- சித்தர்் சீடன் .
பெண் ஆசை விலக்கல்
50:
வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே.
பொருள்: வெயில் பட்ட மஞ்சள் எவ்வாறு மிகுந்த ஒளியுடனும் மினுமினுப்புடனும் இருக்குமோ அது போன்றதாகிய மாதர்களின்(பெண்களின்) அழகிலும் அலங்கார தோற்றத்திலும் விருப்பப்பட்டு முந்தி கொண்டு சென்று அவர்களை அடையும் மாந்தர்கள்(மனிதர்கள்) அலங்காரத்தில் கவர்ந்திழுக்கப்பட்ட இலவுகாத் கிளியை போல் உடலின் புறத்தோற்ற அழகானது அகன்றவுடன் விட்டு செல்ல எண்ணுவர். என்று ஆடு பாம்பே.
51:
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம்
குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே.
பொருள்: வண்டு போன்று கூறிய கண்களையும், பந்து போல் வட்டமான மார்பகங்களையும் கொண்ட பெண்ணை, சித்தம் எனும் ஞானத்தை அறிந்து வெறுத்து ஒதுக்கி, எருமை வாகனத்தில் ஏறி வரும் எமதர்மனையும் வெல்லும் வல்லமை பெறுவோம் ஞானத்தில் என்று ஆடு பாம்பே.
52:
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார்
கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர்
கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே.
பொருள்: வட்டமான உருளை வடிவிலான மார்பகங்கள் நாட்கள் செல்ல அவை வற்றி சுறுங்கி மெலிந்து வடிவிழந்து விடும் அதனை பெரிய மலைக்கு ஒப்பாக எண்ணி கூறாமல், துர் வாசனை உடைய யோனி எனும் கிணற்றில் வீழ்ந்து விடாதே, அப்படி வீழ்ந்து விட்டால் மறு படி எழுவது மிக கடினமானது என்று துணிவுடன் கூறி ஆடு பாம்பே.
53:
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார்
குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள்
கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே.
பொருள்: அழிக்க படிந்த கண்களை கூறிய வாளுக்கு இணையாக பேசும் அறிவிழந்தவர்கள் இறுதியில் குல நலன்களை பற்றி பேசி கொண்டு நெருப்புக்கு அறையாக ஆவார்கள் அன்றி வேறு எதுவும் செய்ய முடியாதவர்கள் என்று ஆடு பாம்பே.
54:
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய்
நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார்
நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே.
பொருள்: சிக்கும் ஈறு, பேன் உடன் துர்நாற்றம் உடைய பெண்ணின் கூந்தலை கருமை நிற மேகத்திற்கு ஒப்பாகவும் , பெண்களின் கொங்கைகளை பொன்னிற்கு ஒப்பாகவும் கூறி விரும்பி உருகி நினைக்கும் மனிதர்கள் இறைவனை மனதுருக நினைப்பதில்லை என்று ஆடு பாம்பே.
55:
நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே.
பொருள்: துர் வாசனை உள்ள எச்சிலையும், சளி கொண்ட உடலையும் கூடிய பெண்ணை அமுதென்றும் தேனென்றும் கூறும் அறிவில்லாத ஆந்தை மனிதர்களால் இறைவன் நிலை என்ன என்பதை அறிய முடியாது என்று ஆடு பாம்பே.
56:
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும்
மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும்
ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும்
ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே.
பொருள்: மயிலே, குயிலே மாணிக்கம் என்றும், மானே, தேனே அமுதே என்றும் தோகை வியர்த்து ஆடும் வண்ண மயிலுக்கு இணையான பெண்ணே என்றும் போற்றி கொண்டு இராமல், உண்மையான இறைநிலையை உணர்ந்து இவை அனைத்தும் மோகம் என்னும் சிற்றின்ப மாயை என்று வெறுத்து ஒதுக்கி ஆடு பாம்பே.
57:
மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்
மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்
கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்
கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே.
பொருள்: மின்னலை போன்ற மேகமும், ஒளி பொருந்திய கண்களை உடையவளே, மெல்லிடை உடையாளே, மேனகயை போல் அழகு நிறைந்தவளே, சீனி சர்க்கரை கட்டியே என்று பெண்ணை சூளுறைப்பதை விடுத்து அந்த மோக மாயயை நீக்கீனோம் என்று ஆடு பாம்பே.
58:
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்
பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்
கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்
கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே.
பொருள்: பூவை போன்றவளே, அழகு உருவம் உடைய பொம்மையை போன்றவளே, தங்கமே, பொக்கிஷமே என்றும், கோவைப்பழம் போன்றவளே, முத்தே என்றும் கூறாமல் துறந்து விட்டோம் என்று ஆடு பாம்பே.
59:
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.
பொருள்: உயிர்களின் உடல் என்பது திரட்சியான அழுக்கு நிறைந்த ஒன்றின் மீது பூசப்பட்ட மஞ்சள் என்றும், நிறைந்த புழு கூட்டின் மீது உள்ள வண்ணத்தை போன்றது என்றும், சிழ் நிறைந்த குழிக்குள் உள்ள சேற்றைப் போன்றது பெண் என்னும் மாயை என்றும் அறிந்து தள்ளி வைத்தும் என்று ஆடு பாம்பே.
குறிப்பு: இவை அனைத்தும் பெண்ணாசை என்னும்் காம இச்சையில்் இருந்துு விடுபட கூறப்பட்டது அன்றி மாதர்் தம்மை இழிவு. படுத்த கூறப்பட்டது அன்று மேலும் சித்தர்கள் என்றும் மாதர் தம்மை இழிவு படுத்தியதில்லை மாறாக போற்றவே செய்திருக்கிறார்கள். ஆகவே மேற்கூறிய அனைத்தும் ஆண் மற்றும் பெண் இருபாலரின் சரீர அமைப்புகளைப்பற்றியதும் உண்மைகளுும் தவிர உயிரின் உள்ளார்ந்த குண அமைப்புகளை பற்றியதுு அல்ல. நன்றி.
No comments:
Post a Comment